சீட்டிவேரம் கண்ணகை அம்மன்

அன்னதானம்

அன்னம் என்பது சோறு ஆகும். தானம் என்பது தா எனும் வினையின் தொழிற்பெயர் வடிவமாகும் என்பது தேவநேயப் பாவாணரின் கூற்று ஆகும். தானங்கள் பலவற்றில் சிறந்தது அன்னதானம். தானத்தைச் செய்வோர் தான் பெறுவோர் பேரனைத்தும் தக்கபேறு தக்கநேசம் தான் வந்து காப்பளிக்கும். தற்காப்பு இதுவன்றித் தான் வேறு இல்லை சொல்ல…………

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம் அதனால்தான் கிருஷ்ண பகவானும் கீதையில் “எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிளானோ அவனுடைய பாவத்தையும் முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக் கொள்ள மாட்டார் “ என்கிறார். அன்தானத்தில் தான் ஒருவரை மட்டும் திருப்திப்படுத்திக்கொள்ள முடியும். அளவற்ற புண்ணியங்களை நல்கும் மற்றப் பொருட்களை எல்லாம் தானமாகக் கொடுத்தாலும் பெறுபவர் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். 

ஆனால் அன்னதானம் மட்டுமே போதும் என்ற சொல்லைத் தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டுவரும் ஆகையால் பூரணமான தானம் அன்னதானம் மட்டுமே ஆகும். உயிரோடு உயிரை சேர்த்து வைத்து இரட்சிப்பதும் அன்னம் தான். அதனால் தான் “ உண்டு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே “ என்று சொல்லியிருக்கிறது மணிமேகலையில் மணிமேகலைக்கு காஞ்சியில் அட்சய பாத்திரம் கிடைத்தது. அவள் அதனை வைத்துக்கொண்டு சகல ஜனங்களுக்கும் பசிப்பிணியைப் போக்கினாள். தலைப்படுதானம் , இடைப்படுதானம் , கடைப்படுதானம் என்று பொதுவாக மூன்று வகைப்படுத்தப்படுகின்ற தானங்களிலும் தேவர்களுக்கும் , மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும் மிக மிக உயர்ந்ததாக கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும். 

வயிறு நிறைந்து உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜென்மங்களையும் தொடர்ந்து வருவது அன்னதானத்தால் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் செய்தவரை மட்டும் சென்றடையாமல் செய்தவரின் சந்ததியினையும் காத்துத் தொடரக்கூடியது. ஆகவே நாம் அனைவரும் அன்னதானத்தின் மகிமையை அறிந்து நம் இயல்புகளுக்கமைய அன்னதானம் செய்வோமாக…..!

 

Scroll to Top